Thursday, July 29, 2010

Vizhiyil Vilunthaval Songs Lirics

விழியில் விழுந்தவள்

திரைப்படப் பாடல்கள்

1.பார்த்தால் நான்

பார்த்தால் நான் சார்லிசாப்ளின் காதலில் மன்னன்தான்
பேச்சில் நான் லாரல்ஹார்டி லீலையில் கண்ணன்தான் ( 2 )
வேல்டுமேப்பில் ரஷ்யாக்கு பஸ்ரூட்டை காட்டட்டா
திருக்குறளில் திருத்தங்களை நான் கூறட்டா ( 2)
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய் செய் ( 2 )

என்பேச்சில் இலக்கணமுண்டு அர்த்தங்கள் கிடையாது
என்செயலில் தனித்துவமுண்டு யாருக்கும் புரியாது ( 2 )
ராங்ரூட்டில் பைக்ஓட்டி கண்டங்கள் தாண்டட்டா
விண்வெளியில் வீடெடுத்து குடியேறட்டா
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய்

கண்முன்னே காணும் யாவும் லக்கென்றாய் பிறந்தானே
நிழலுக்கும் நிறங்களைக் கண்டேன் உனைக்கண்ட பின்நானே
உன்சொல் என் ஒருசொல் கவிதை வயலின்வழி வாசிப்பேன்
கலைகின்ற நகங்களை அள்ளி பிறையென்றே யோசிப்பேன்
என் காதல் புரிகின்ற மொழிதேடி பயிலட்டா
வடமொழியில் அயல்மொழியில் மனுபோடட்டா
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய்

2.விழிகளில் விழுந்தவள்

விழிகளில் விழுந்தவள் நீதானா
வயதினை குறைத்ததும் நீதானா
கனவினை விதைத்ததும் நீதானா
உன் இதயத்தின் அறைகளை இருப்பிடம் கொண்டவன் நானா
சிறகுகள் கொடுத்ததும் நீதானா
இமைகளை பறித்ததும் நீதானா
உன் பாதத்தின் சுவடினை வழிபட நினைத்தவன் நானா

இருமுறை ஜனனமும் இதுதானா
அடிக்கடி மரணமும் இதுதானா
இனித்திடும் இம்சையை உணர்வேனா
ஒரு நடந்திடும் தவத்தினை உனக்கென செய்பவன் நானா
புதுவகை அனுபவம் என்பேனா
தீயினில் தேன்துளி காண்பேனா
இனி இடப்பக்கம் சுழல்கிற பூமியில் வாழ்பவன் நானா

தேவதை எந்தன் முன்னே
தேவை உன் காதல் என்பேன்
விழிகளால் என்னை கொல்கின்றாய் பெண்ணே
ஞாபகம் நெஞ்சைக் கொய்ய
இரவுகள் யுத்தம் செய்ய
என்னை நான் தேடித் திரிகின்றேன்
என் காதல் பனிபோல உன்மீதும் விழுகிறதே
உன்னாலே உயிர் வாடுதே ( விழிகளில் விழுந்தவள்...)


3.ஒருநாள் மழைநாள்

ஒருநாள் மழைநாள் அதில்நான் உனைப் பார்த்தேன்
குடையில் முகிலா கவியில் உனைச் சேர்த்தேன்
பகலின் முடிவா இரவின் முதலா நீ
பனியில் வடித்த உலவும் சிலையா நீ
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...

இதயம் எடை கூடுதே
இரவும் தினம் நீளுதே
நிலவைத் தொடத் தோன்றுதே
உன்னால் நிலை மாறுதே
இமைகள் உதிர்காலமா
உயிரும் வெளியேறுமா
கனவே உணவாகுமா
இதுகாதல் சாபமா
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...


4.பெண்ணே நீ

பெண்ணே நீ காதல் தந்து சாகச் செய்யும்
பெண்ணே நீ வா
பெண்ணே நீ கண்ணில் நின்று தேகம் தின்னும்
பெண்ணே நீ வா
நேற்றுவரை யாரும் இல்லை
கண்டேன் உனை நான் நான் இல்லை
வழியில் உனை நான் காண
புதன் வரை பறந்தேன்

என் இதயம் ஏன் காதலில் விழுந்தது
என் பிழையோ உன்னாலோ
என் உருவில் யார் தவறுகள் செய்தது
யாரிடம் நியாயம் கேட்பதோ
கண்மணியே என் கனவுக்கும் வலிக்குது
என் குற்றமோ உன்னாலோ
உன் எதிரில் ஒரு குழந்தையின் அழுகுரல்
தாயாக என்னைக் கொஞ்ச வா
கவலையின் நடுவே நின்று வாழ்கின்றேன்
தவணை முறையில் பெண்ணை சாகின்றேன் ( பெண்ணே நீ )

5.சிறகின்றி பறவை

சிறகின்றி பறவை பறந்திடுமா
சிறகுதிர்ந்த பறவை இன்று நான்
பிரிவொன்றை காதல் புரிந்திடுமா
பிணைக்கைதி வாழ்க்கை தோன்றுமா
தொலைக்காட்சி பார்க்கும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்
தொலைதூரம் தேடும் போதும்
தொடும் தூரம் காணும் போதும்
நீ தானே என்னில் வாழ்கிறாய் ( சிறகின்றி )

எனைத்தீண்டிப் பாரடா
எதிர்காலம் நீயடா
நீயின்றி வாழ்வதா
நீரின்றி சாவதா
காற்றோடு தனிமையில் கதை நூறு சொல்கிறேன்
என்னோடு நான் தினம் தகறாறு செய்கிறேன்
இரண்டு விழியில் இரண்டு கனவு நான் காண்கிறேன்
இது என்ன போர்க்களம்
எனைச் சுற்றி தீக்குளம்
உன்காதல் கேட்கிறேன் உயிரோடு சாகிறேன்
கவலை மழையில் கவனக் குறைவில் நான் வாழ்கிறேன் ( சிறகின்றி )

6.தேன்கூடு

தேன்கூடு நீ தீண்டு தீண்டு தேகம் சுடும்
தீக்கூடு நான்
அணைத்திடு தடையேதும் இல்லை
அழைக்கிறேன் நான் நானில்லை
இதழலால் என் இதழில் கூறும் அறிந்திட வருவாய் ( தேன்கூடு )

எப்படிநான் என் நாணம் இழந்தது
எப்படியோ உன்னாலோ
உன் இதழோ என் காதினை கடித்தது
ஆசையைக் கட்டி வைக்கவா

எப்படித்தான் பூவாசம் அழிந்தது
எப்படியோ வண்டாலோ
எப்படித்தான் பெண்வாசம் அடைவது
வாசத்தை என்னுள் சேர்க்க வா
இது ஒருவழிப் பாதை ஆளில்லை
அணைப்பையும் தேடு அங்கு வான்எல்லை ( தேன்கூடு )


7.எனைத்தீண்டிப் பாரடா
எனைத்தீண்டிப் பாரடா
எதிர்காலம் நீயடா
நீயின்றி வாழ்வதா
நீரின்றி சாவதா (2)
இரண்டு விழியில் இரண்டு கனவு நீ தானடா
இது என்ன போர்க்களம்
எனைச் சுற்றி தீக்குளம்
உன்காதல் கேட்கிறேன் உயிரோடு சாகிறேன்
கவலை மழையில் கவனக் குறைவில் நான் வாழ்கிறேன்

சிறகின்றி பறவை பறந்திடுமா
சிறகுதிர்ந்த பறவை இன்று நான்
பிரிவொன்றை காதல் புரிந்திடுமா
பிணைக்கைதி வாழ்க்கை தோன்றுமா
தொலைக்காட்சி காணும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்
தொலைக்காட்சி காணும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்


கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

செல் 9442402571
மின்னஞ்சல் prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
வலைப்பதிவு :Karaikalkprabakaran.blogspot.com
அஞ்சல் முகவரி
கா.பிரபாகரன்,
20 ,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
அ.கு,எண் 609603.
காரைக்கால் தாலுக்கா.


விழிகளில் விழுந்தவள் திரைப்பட குழுவினரின் நேர்காணலை சற்றுமுன் கலைஞர் இசையருவியில் பார்த்தேன்.
திரைப்படத்தின் டிரெய்லரே வியக்க வைப்பதாய் இருக்கிறது.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு கிராப்பிக்ஸ் விருந்தை காதலோடு படைத்திருக்கும் இளமை பட்டாளத்துக்கு
வாழ்த்துக்கள்.
பல்லோக்கின் இசையும். ஆர்.கே.ரகுராமனின் பாடல் வரிகளும் இனிமை.
சிறகின்றி பறவை பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்.
முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் நேர்த்தியாக எழுதியுள்ளார் ரகு.
இசையும் பாடல்வரிகளை சேதப்படுத்தாமல் அமைந்துள்ளது.பல்லோக்கின் இசை மெலோடியை விரும்புவோருக்கும்
பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இயக்கிய அஜாசின் திட்டமிடலை ஒவ்வொரு காட்சியும் புலப்படுத்துகிறது.
தமிழ் திரையை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றிருக்கும் G-ANTS PRODUCTIONS நிறுவனத்தாருக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

அன்பன்,
காரைக்கால் கே.பிரபாகரன்.
29 ஜீலை 2010.

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

செல் 9442402571
மின்னஞ்சல் prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
வலைப்பதிவு :www.Karaikalkprabakaran.blogspot.com
அஞ்சல் முகவரி
கா.பிரபாகரன்,
20 ,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
அ.கு,எண் 609603.
காரைக்கால் தாலுக்கா.

No comments:

Post a Comment