Monday, July 19, 2010

Trichy Loganathan Singer

திருச்சி லோகநாதன்
(சில குறிப்புகள்)
மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு திருச்சி லோகநாதன்மகனாக தோன்றியவர் காலத்தை வென்ற பல திரை பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்கள்.இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியை குறிப்பதாகும்.
சங்கீதக் கல்வி அளித்தவர்:நடராஜன்
சிறுவயதில் ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத்தொடங்கும் பாடல்,மக்கள்திலகம் எம்.ஜி,ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இரண்டாவது பாடல்:கலைஞர் கதை,வசனத்தில் உருவான அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற 'இனி வசந்தமாம் வாழ்விலே' என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய காலத்தை வென்ற கானங்கள்:
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்),
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்),
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி),
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,வெள்ளிப் பனிமலையின் (கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல்கள்),
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே(பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபாகாவலி)
பொன்னான வாழ்வு(டவுன்பஸ்)

மனைவி:சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி

மகன்கள்:மகராஜன்,
தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என நிழல்கள் படத்தில் கீதமிசைத்தவர் இவர்தான்),தியாகராஜன்.

குறிப்பிட தகுந்த இரண்டு சம்பவங்கள்:
1.நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொழுவில் மதுரை சோமு பாடிய பாடலை ரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை பரிசளித்தார்.

2.சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குதூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார்,தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச்சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்,அவரை பாடச்சொல்லுங்க என்று கூறிவிட்டார்.திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குதூக்கி படத்தில் பாடினார்,
அவர்தாங்க T.M.செளந்தரராஜன்.

மறைவு:17 நவம்பர் 1989.



தகவல் திரட்ட உதவியவை:காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம்,வானொலி நண்பர்கள்,ராணி வாரஇதழ்.

எழுத்தாக்கம்:
காரைக்கால் கே.பிரபாகரன்.

No comments:

Post a Comment