Friday, December 31, 2010

ஒரு வரி துணுக்குகள்




ஒரு வரி துணுக்குகள்

லெனின் இறந்த பிறகு அவர் மூளை தனியே அகற்றப்பட்டு சோவியத் மூளை ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உண்டு.
ஜப்பான் நாட்டு தேசிய கீதத்திற்கு மொத்தமே நான்கு வரிகள்தான்.
பண்டைய எகிப்தியர்கள் பூனையை தெய்வமாக மதித்ததால் பூனையைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டு வந்தது.
முயல்கள் கண்ணீர்விட்டு அழாது.
தமிழகத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் என்ற பெயரில் 27 ஊர்கள் உள்ளன.
மறவர் நாட்டை ஆண்ட சேதுபதி மன்னன் இறந்த போது 47 பேர் உடன்கட்டை ஏறினர்.
நத்தையின் வேகம் மணிக்கு 0.00758 மைல்.
' ராக் மியூசிக் ' பாடுபவர்களில் 87 சதவீதம் பேர் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
குழந்தை பிறந்தவுடன் குழந்தையை பேணிக்காக்க பெற்றோர்களுக்கு ஆறுமாதம் விடுமுறை வழங்குகிறது ஸ்விடன் அரசு.
' கோடா பாக் ' என்ற வார்த்தைதான் பேச்சு வழக்கில் கோடம்பாக்கம் ஆனது.கோடா என்றால் குதிரை என்று அர்த்தம்.
கறுப்பு,சிவப்பு,நீல நிறங்கள் கொசுக்களுக்கு பிடித்தவை .வெள்ளை,மஞ்சள் உடைகள் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் கவசங்கள்.

தொகுப்பு:
காரைக்கால் கே.பிரபாகரன்.

No comments:

Post a Comment