Friday, December 31, 2010

எஸ்.எம்.எஸ் கடி

எஸ்.எம்.எஸ் கடி


" பலநூறு வருஷம் ஆகுமாமே...
ஒரு வைரம் உருவாக...
நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்..?
நோ...நோ...நோ...அழக்கூடாது !
கன்ட்ரோல் யுவர் செல்ப்...
இது எனக்கு வந்த மெசேஜ் !!! "
-இப்படிக்கு அடுத்தங்க வயித்தெறிச்சலை அடிக்கடி கிளப்பி ஆனந்தம் அடைவோர் சங்கம் !

" பிரஷ் பண்ணாத பல்லும், மெசேஜ் அனுப்பாத செல்லும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை !"
- இப்படிக்கு பஞ்சர் சைக்கிளை தள்ளும் போதும் பஞ்ச் டயலாக் சொல்லுவோர் சங்கம் .

" போன்னாலும் கோன்னாலும் ஒன்னுதானே ...
அப்புறம் ஏன் போகோ டீ.வி.ன்னு பேரு வச்சாங்க ?
-விளம்பர கேப்பில் தத்துவமாய் கேள்வி கேட்போர் சங்கம்.

" உங்க தாத்தாக்கு உடம்பு முடியாம இருந்துச்சே இப்ப எப்படி இருக்கு ? "
" இப்ப முடிஞ்சிருச்சு ! "

" கண்ணகி மதுரையை எரித்தது எந்தக்காலம் ? "
" அது ஃபயர் சர்விஸ் இல்லாத காலம் சார் !"

" எடிசன் மட்டும் கரண்ட்டை கண்டுபிடிக்கலன்னா என்ன ஆயிருக்கும் ? "
" நாம மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டீ.வி பாக்குறமாதிரி ஆயிருக்கும் ! "

" சார் ! இதுல உட்காராதிங்க இது திப்பு சுல்தான் உட்கார்ந்த நாற்காலி. "
" கவலைப்படாதிங்க,அவர் வந்தா எந்திருச்சிடுவேன் !"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

ஒரு வரி துணுக்குகள்




ஒரு வரி துணுக்குகள்

லெனின் இறந்த பிறகு அவர் மூளை தனியே அகற்றப்பட்டு சோவியத் மூளை ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உண்டு.
ஜப்பான் நாட்டு தேசிய கீதத்திற்கு மொத்தமே நான்கு வரிகள்தான்.
பண்டைய எகிப்தியர்கள் பூனையை தெய்வமாக மதித்ததால் பூனையைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டு வந்தது.
முயல்கள் கண்ணீர்விட்டு அழாது.
தமிழகத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் என்ற பெயரில் 27 ஊர்கள் உள்ளன.
மறவர் நாட்டை ஆண்ட சேதுபதி மன்னன் இறந்த போது 47 பேர் உடன்கட்டை ஏறினர்.
நத்தையின் வேகம் மணிக்கு 0.00758 மைல்.
' ராக் மியூசிக் ' பாடுபவர்களில் 87 சதவீதம் பேர் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
குழந்தை பிறந்தவுடன் குழந்தையை பேணிக்காக்க பெற்றோர்களுக்கு ஆறுமாதம் விடுமுறை வழங்குகிறது ஸ்விடன் அரசு.
' கோடா பாக் ' என்ற வார்த்தைதான் பேச்சு வழக்கில் கோடம்பாக்கம் ஆனது.கோடா என்றால் குதிரை என்று அர்த்தம்.
கறுப்பு,சிவப்பு,நீல நிறங்கள் கொசுக்களுக்கு பிடித்தவை .வெள்ளை,மஞ்சள் உடைகள் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் கவசங்கள்.

தொகுப்பு:
காரைக்கால் கே.பிரபாகரன்.

S.M.S சிரிப்பு

S.M.S சிரிப்பு

நீதிபதியும்,குற்றவாளியும்...
"நீ செய்த குற்றத்துக்கு உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்!"
"எவ்வளவு வெயிட்டு தூக்கணும்னு சொல்லுங்க?"


"எங்க வீட்டுக்கு பாம்பு வந்துடுச்சு.அதனால பாம்பாட்டிய கூப்பிட்டு வந்து அடிச்சோம்!"
"அடப்பாவிகளா...பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய எதுக்கு அடிச்சிங்க?"


"போலீசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம்?"
"அடிதடி செஞ்சா பொறுக்கி,தடியடி செஞ்சா போலீஸ்!"


"நல்ல பாம்பு படம் எடுக்கிறது,இதை இங்கிலீஷ்ல எப்படி சொல்றது?"
"த குட் ஸ்நேக் இஸ் டேக்கிங் பிச்சர்!"

நரகத்தில் இளைஞனும்,எமனும்...
"என் காதலிக்கு இங்கேயிருந்து ஒரு கால் பண்ண எவ்வளவு செலவாகும்?"
"ஒரு பைசா கூட செலவாகாது...நரகம் டு நரகம் ப்ரீதான்!"

காரைக்கால்கே.பிரபாகரன்.

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

1.(ஜாதகம் பார்க்குமிடத்தில்...)

"இந்த ஜாதகத்துக்கு பணம் வந்து குவியும்!"
"குவியவே வேண்டாம்,இந்த ஜாதகத்தை அடமானமா
வச்சிக்கிட்டு ஒரு நூறு ரூபா குடுங்க போதும்!"

2.(காவல் நிலையத்தில்...)

"யோவ் கான்ஸ்டபிள்,இவன் அன்றாடங்காய்ச்சிங்கிறான்.
இவனை ஏன்யா அரஸ்ட் பண்ணே?"
"இவன் அன்றாடங்காய்ச்சிறது சாராயம் சார்!"

3.(மன்னரும் மதியுக மந்திரியாரும்...)

"மந்திரியாரே ! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே
மணம் உண்டா?"
"முதலில் பெண்ணுக்கு இயற்கையாகவே கூந்தல் உண்டா என்பதை
உறுதி செய்ய வேண்டும் மன்னா!"

4.(நிருபரும் நடிகையின் தாயாரும்...)

"உங்க மகளுக்கு கல்யாணமாமே!"
"இன்னும் எனக்கே கல்யாணம் ஆகலை,அதுக்குள்ள அவளுக்கு
என்ன அவசரம்?"

5.(டாக்டரும் பேஷண்டும்...)

"எப்படியாவது என்னை காப்பாத்திடுங்க டாக்டர்!"
"எல்லாரும் இதையே சொன்னா நான் யாருக்குத்தான்
ஆப்ரேஷன் பண்றது?"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.